என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.
    • 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.

    நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொருநை, தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தெற்கில் இருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும்

    என்ற நமது கூற்றுக்கு சான்றாக உள்ளது.

    கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.

    கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும்.

    தனித்துவமான தமிழர்களின் வரலாற்று பெருமையை வெளிக்கொணரும் எந்த ஆய்வும் நடைபெறக்கூடாது என மத்திய அரசு தடுக்கிறது.

    இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலைவோருக்கு, கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? 2000 ஆண்டுகால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம்.

    100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து, போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சு கூட விடவில்லை.

    காந்தியின் பெயரை நீக்கியதுடன், 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×