என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விவசாயிகளுக்கு அ.தி.மு.க. செய்த நன்மைகளை தி.மு.க. அரசு முடக்கிவிட்டது- எடப்பாடி பழனிசாமி
- விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.
- திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் தான் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை எல்லாம் முறையாக அதிகாரிகளை நியமித்து முழுமையாக தூர்வாரினோம்.
விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை திமுக அரசு முடக்கிவிட்டது.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை.
12,000 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுத்தந்தது அதிமுக அரசு.
விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.
திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.
18,000 நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடிக்கி உள்ளதாக செய்தி பார்த்தேன், மழை வந்தால் வீணாகிவிடும்.
அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து உரிய பணத்தையும் தந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






