என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இனிவரும் காலம் இளைஞர்களுக்கான காலம்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    இனிவரும் காலம் இளைஞர்களுக்கான காலம்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்!
    • நம் திராவிட மாடல் வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது.

    இனிவரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்!

    உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக TamilNaduKnowledgeCity அமையும். நம் DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது!

    மேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம்,

    @Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின.

    இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்!

    வெல்வோம் ஒன்றாக!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×