என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் உடன்பிறப்புகளை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் - தமிழிசை
    X

    காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் உடன்பிறப்புகளை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் - தமிழிசை

    • பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்.
    • நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுக.

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மனது வேதனை அடைகிறது... எளிமையின் சிகரமாகவே வாழ்ந்த மாபெரும் தலைவனான காமராஜருக்கு ஏசி வைத்து கொடுத்தோம் என்றும் ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கலைஞரைப் பார்த்து சொன்னார் என்றும்.. கருத்துக்களை திருச்சி சிவா திருச்சி கூறியது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது..

    இன்று பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அவர் மீதான பழி "சொற்களை" சரியாக எதிர்க்கவில்லை என்பதே மக்கள் கருத்து.. எல்லாவற்றையும் விட மனதை ரணப்படுத்துவது... அவரின் அறையில் ஏசி இருந்தது என்று திமுக 200 உடன்பிறப்புகள்.. அவர் இருந்த எளிய அறையில் ஏசியை வட்டமிட்டு போடுவதும்... கடைசி நாள்.. அவர் படுத்து இருக்கும்போது கூட ஏசி ஓடிக் கொண்டிருந்தது.. என்று கொச்சையாக.. பதிவு போடுவதும்.. மிகவும் கண்டிக்கத்தக்கது...

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் நேரான இயக்க உடன்பிறப்புகளையும்.. 200க்கான இணைய உடன்பிறப்புகளையும்.. கட்டுப்படுத்த வேண்டும்.

    நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுகவுடன்.. ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும்... காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது.

    பெருந்தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதை காங்கிரஸ் எதிர்ப்பதும் வெறும் பெயரளவில் தான் இருக்கிறது என்பதும் வேதனை...

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×