என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
    X

    இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

    • தனியார் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கிடையாது என முதலமைச்சர் அறிவிப்பாரா?
    • நாங்குநேரி பயங்கரம் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏன் பேசவில்லை?

    சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அரசு எல்லா மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது.

    * இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் வைத்துள்ளது.

    * தனியார் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கிடையாது என முதலமைச்சர் அறிவிப்பாரா?

    * தி.மு.க. அரசு தனது தோல்வியை மறைப்பதற்கு மொழிப் பிரச்சனையை எழுப்புகிறது.

    * நாங்குநேரி பயங்கரம் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏன் பேசவில்லை?

    * தி.மு.க.வினர் இந்தியில் போஸ்டர் அச்சடித்தனர். இந்தியில் ஓட்டு கேட்டார்கள்.

    * முதலமைச்சர் பதட்டத்தில் இருக்கிறார். அவர் மட்டுமல்ல கூட்டணி கட்சியினரே பதட்டத்தில் இருக்கிறார்கள்.

    * வேங்கை வயல் கண்டுபிடித்தீர்களா?

    * கீழடி அகழாய்வுக்கு அதிக நிதி ஒதுக்கியதே பிரதமர் மோடி தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×