என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லியின் புதிய முதலமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
- டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
- நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார்.
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20) மாலை டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவிற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லியின் முதலமைச்சர் ஆக.. திருமதி ரேகா குப்தா அவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்... நான் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து பெருமைப்படுகிறேன்.. ஏனென்றால்.. கடுமையான உழைப்பாளியான பெண் தலைவரை.. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






