என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புறநகர் மின்சார ரெயில்-மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் உயரவில்லை
- சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புறநகர் மின்சார ரெயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யலாம் என்பதாலும் அதில் பயணிப்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது ரெயில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வழக்கமாக உள்ள அதே கட்டணமே நீடிக்கிறது. இதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.






