சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20-ந்தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20-ந்தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு
Published on

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.

இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com