என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை - நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று குஷ்பு பதிவு
- குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.
இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான மாலைமலர் செய்தியை பகிர்ந்து குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இதுபோன்ற செய்திகள் நீதித்துறை அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இது பெண்களின் சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் பெண்கள் சமூகத்திற்கு ஒரு வலுவான நல்ல செய்தியை அனுப்புகிறது.
ஒவ்வொரு பெண்ணும் தனக்காக நிற்க வேண்டும், கட்டாயம் நிற்க வேண்டும். கண்ணியம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க, மற்றவர்கள் உங்களுக்காக அதைச் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். ஒரு துளி கூட உங்களை அவமதிக்கக் காத்திருக்கும் அத்தகைய ஆண்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர்.
உங்கள் தலையை உயர்த்தி நில்லுங்கள், உலகம் உங்களுடன் இருக்கும். இது எனது வெற்றி மட்டுமல்ல, இதுபோன்ற துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. போதும் போதும். ஒற்றுமையாக நின்று அதை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.






