என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்: பழனிசாமியை சாடிய செல்வபெருந்தகை
- கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
- ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர்.
சென்னை:
காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி ஒருமையிலும், கொச்சைப்படுத்தியும் பேசி தரம்தாழ்ந்த அரசியலை செய்கிறார். எங்களை வம்புக்கு இழுத்து அநாகரிகமாக பேசி வருகிறார்.
தி.மு.க. கூட்டணியை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலும், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என மக்கள் பிரச்சனை என்று வரும்போது நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி நாளிதழ்களை படிப்பதில்லை. அரசியலும் தெரிவதில்லை. வாயில் வந்தபடி பேசிவிட்டு செல்கிறார். அவரைப் போன்று கொச்சைப்படுத்தி பேச எங்களுக்கு தெரியாது.
கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர். அதுபோன்று நான் பொதுவெளியில் பேச முடியாது.
நாங்கள் கூடுதல் தொகுதி கேட்கவில்லை என யார் சொன்னது. எங்களுடைய பிரச்சாரங்களை ஆரவாரம் இல்லாமல், உயிரிழப்பு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜனவரியிலேயே தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.






