என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ADMK |விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும்- எடப்பாடி பழனிசாமி
    X

    ADMK |விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும்- எடப்பாடி பழனிசாமி

    • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    • இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக திமுக என்ன செய்தது.

    சென்னை எழும்பூர் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்ற இபிஎஸ் என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது இபிஎஸ் கூறியதாவது:-

    என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுமையாக உணர்வுப்பூர்வமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுமையாக உணர்வுப்பூர்வமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். என்டிஏ கூட்டணி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள்.

    இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக திமுக என்ன செய்தது. கடந்த தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை.

    சிறுபான்மை மக்களுக்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி. அவசரமாக புதிய புதிய திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டுவது ஏன்? தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை.

    தவெக உடன் இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×