என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்- சுற்றுலா தலங்கள் மூடல்
- உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுகிறது.
- போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுவதாக கூறப்பட்டு்ளது.
மேலும், மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story






