என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழகத்தின் வெற்றிக் களம் - த.வெ.க.-வில் ரஞ்சனா நாச்சியார்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழகத்தின் வெற்றிக் களம் - த.வெ.க.-வில் ரஞ்சனா நாச்சியார்!

    • இனி என்னுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • களம் இனிமேல் தான் சூடுபிடிக்கப்போகிறது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் த.வெ.க. கொள்கை பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி இலக்கை அடைவது தொடர்பான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதன்பின், கொள்கைத் தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனிடையே, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் இன்று த.வெ.க.வில் இணைய விழா நடைபெறும் அரங்கத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா நாச்சியார், இனி என்னுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மொழிக்கு நாம் எதிரி கிடையாது. ஆனா இந்தி தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நிலைமை வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    இனி தமிழக வெற்றிக்கழகம்தான் தமிழகத்தின் வெற்றிக்களமாகப் போகிறது. அதனை தமிழகம், தமிழ்நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள். எதிர்காலம் சிறப்பாக உள்ளது. களம் இனிமேல் தான் சூடுபிடிக்கப்போகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக விஜய் எந்த எல்லைக்கும் நிற்பார். அவருக்கு உறுதுணையா, பெண்களுக்கான ஒரு குரலா நானும் இருக்கனும் என்று நினைத்து தான் த.வெ.க.வில் இணைகிறேன் என்றார்.

    Next Story
    ×