என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி
    X

    இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி

    • அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
    • தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார்.

    விருதுநகர்:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க.வுன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார். இதன்பின் தியானத்தில் ஈடுபட்டார்.

    முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இதன்பின்னர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு நள்ளிரவில் தியானத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல சலசலப்புகள் ஏற்பட்டது.

    Next Story
    ×