என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமைச்சர் பதவிக்கான துளியும் தகுதியற்ற ஒட்டுண்ணி போன்றவர் ரகுபதி - ஜெயக்குமார் கடும் தாக்கு
    X

    அமைச்சர் பதவிக்கான துளியும் தகுதியற்ற ஒட்டுண்ணி போன்றவர் ரகுபதி - ஜெயக்குமார் கடும் தாக்கு

    • எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
    • அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக ரகுபதியையே வந்து சேரும்.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தாக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது.

    அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.

    அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா?

    அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும்.

    கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×