என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரம் கோவிலில் நாளை பொது தரிசனம் ரத்து
- வார விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
- மதியம் 3.30 மணிக்கு பின் வழக்கம் போல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
இதனால் ராமேஸ்வரத்தில், குறிப்பிட்ட அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் வார விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி நாளை தரிசனம் செய்ய உள்ளதை அடுத்து பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மதியம் 3.30 மணிக்கு பின் வழக்கம் போல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






