என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 50 சதவீதம் நல்லது நடந்திருக்கிறது - பிரேமலதா
- பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.
- தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது.
தூத்துக்குடி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 3-ந் தேதி வரை சுற்றுப்பயணம் இருக்கிறது.
கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது.பிப்ரவரி 20-ந் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ, மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ, தே.மு.தி.க.விற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டிக்காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் கையில் கொடுத்து இருக்கிறார். சரியான நேரத்தில் கூட்டணியை அறிவிப்பேன்.
பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்று இருக்கின்றார்.
விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் வருவது குறித்து கேட்கிறீர்கள். படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்று உரியவரான விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன்.
தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. பல தடவை எந்த மார்க் என்று நான் கூறி இருக்கின்றேன். 50 சதவீதம் நல்லது நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கின்றது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்க தான் செய்கின்றது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் எல்லோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






