வடகிழக்கு பருவமழை: தீபாவளி அன்னைக்கு மழை வருமா? - பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்

சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும். நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
வடகிழக்கு பருவமழை: தீபாவளி அன்னைக்கு மழை வருமா? - பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்
Published on

தமிழகத்தில் வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தாலும் மழை பெய்து இதமான சூழ்நிலையை தந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் ஏற்கனவே பெய்து வரும் மழையால் தீபாவளியை கொண்டாட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளி அன்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த ஒருவாரமாக உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.

சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும். நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 19 மற்றும் 20-ந்தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்யும். தீபாவளி அன்று கண்டிப்பாக மழை இருக்கும்.

தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்ட மக்கள் வெளியே செல்லும் போது குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்வது அவசியம் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com