5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Published on

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக, திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.

மத்திய அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், ரெயில் பயணிகள் வசதிக்காக 2 அம்ரித் பாரத் ரெயில்கள், 2 விரைவு ரெயில்கள், ஒரு பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்-சாரளப்பள்ளி மற்றும் கோவை-தன்பாத் ஆகிய 2 அம்ரித் பாரத் ரெயில் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நெல்லை- மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை- காரைக்குடி, நாகர்கோவில்- சாரளப்பள்ளி ஆகிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com