என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம் - அண்ணாமலை பாராட்டு
- 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது.
- பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது.
பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம் என்று அண்ணாமலை பார்ட்டியுள்ளார். பராசக்தி படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "2026 சட்டமன்ற தேர்தலில் பராசக்தி திரைப்படம் திமுகவின் முரசொலியாக அவர்களையே வீழ்த்தும். தீ பரவட்டும் என வைத்திருக்கிறார்கள். முதலில் அவர்கள் வீட்டைத்தான் தீ கொளுத்தும். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கிற உங்கள் கூரையில் தீ பரவட்டும். இன்னும் ஒரு வாரத்தில் முதலமைச்சர் பராசக்தி படம் பார்த்துவிட்டு ரிவிவ்யூ போடுவார். பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம்" என்று தெரிவித்தார்.






