என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல் கொள்முதல்.. நகர்வில் தொய்வு..?- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
- 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
- அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது.
தமிழகத்தில் நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
நெல் கொள்முதல், நகர்வில் தொய்வு என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மழை, பண்டிகையால் ஏற்பட்ட தடங்கலையும் மீறி 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களை மீறி லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் நெல் நகர்வு நடைபெற்று வருகிறது. 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது. நெல் போக்குவரத்து செலவினம் திமுக ஆட்சியில் ரூ.731, அதிமுக ஆட்சியில் ரூ.1,622 செலவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






