என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
- கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவு.
- கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 8.6 செ.மீ, அம்பத்தூரில் 7 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பணிக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் பருவமழை மீட்பு நடவடிக்கை தொடர்பான கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.






