என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீவிரமடைந்த பருவமழை: அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு
- பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
- முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயலால் சென்னைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
அவ்வாறு நடைபெறும் பணிகளை முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.






