என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று விஜய் தொடங்கி வைக்க இருந்த டி.வி.கே. செயலி அறிமுக விழா ஒத்திவைப்பு
    X

    சென்னையில் இன்று விஜய் தொடங்கி வைக்க இருந்த 'டி.வி.கே. செயலி' அறிமுக விழா ஒத்திவைப்பு

    • த.வெ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக “மை டி.வி.கே.” என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

    இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அவர் அதற்கான பணிகளை முடுக்கி விட்டு உள்ளார்.

    மதுரை மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்.

    த.வெ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக "மை டி.வி.கே." என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த செயலியை விஜய் இன்று அறிமுகப்படுத்தி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட முடிவு செய்திருந்தார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் மை டி.வி.கே. செயலி தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    டி.வி.கே. செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அதன் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகிற 24-ந்தேதி புதிய செயலியின் தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆகியவை வருகிற 24-ந்தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அன்றைய தினம் புதிய செயலியை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

    Next Story
    ×