என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் குழந்தையா? - அன்புமணி பேச்சுக்கு பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கண்டனம்
- அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
- தெருவில் இலந்தை பழம் விற்பது கேவலமா?
சேலத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்.
* அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
* ராமதாஸ் தான் பா.ம.க.விற்கு தாய். சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
* 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என அன்புமணி சொல்கிறார். அந்த குழந்தைதானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?
* தெருவில் இலந்தைப் பழம் விற்பவர் கேவலமானவரா? ராமதாஸை அவமானப்படுத்துவதாக நினைத்து, தெருவோர வியாபாரிகளை, பாட்டாளிகளை அவமானப்படுத்தியுள்ளார் அன்புமணி.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோட்டில் இலந்தைப் பழம் விற்பவர்களை அழைத்து ராமதாஸ் பதவி தருவதாக அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.






