என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல் - மு.க.ஸ்டாலின்
- பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான்.
- கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 2 நாள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க.வின் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா?
* பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் ஊழல்வாதிகள் வெளுக்கப்பட்டு விட்டனரா?
* இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும்?
* களத்தில் எங்களை எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல்.
* ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுடன் தான் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.
* கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அது துரோகக்கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






