என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும்.
- விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் தொடங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று காவல் துறை மானிய கோரிக்கை மீது பேசுகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
கோவை மாவட்டம் நீலாம்பூரில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ. 4.88 கோடி செவில் உருவாக்கப்படும்.
கீழடியில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.2.83 கோடியில் உருவாக்கப்படும்.
சேரன்மாதேவி உட்கோட்டத்தில் உள்ள மேலச்செவலில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.
பொங்கலூரில் புதிதாக காவல் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.
திருவண்ணாமலை கோவிலுக்கு என புதிதாக போலீஸ் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.
குழித்துறையில் புதிதாக இருப்புப்பாதை காவல் நிலையம் ரூ.2.15 கோடி செலவில் உருவாக்கப்படும்.
மதுரை மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் புதிதாக காவல் நிலையம் ரூ.6.57 கோடியில் உருவாக்கப்படும்.
மதுரை மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாடக்குளத்தில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.6.57 கோடி செலவில் உருவாக்கப்படும்.
திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை, பெரம்பூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் தலா ரூ.7.50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
ரூ.72.30 லட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புதிதாக போலீஸ் உட்கோட்டம் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.2.68 கோடி செலவில் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப்பிரிவு ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஒன்று ரூ.8 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவின் இணையவழி குற்றப் பிரிவில், தேவையான பணியிடங்களுடன் சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஒன்று புதிதாக ரூ.63 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத் தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு என புதிய அலகு ஒன்று ரூ. 1.95 கோடி செலவில் உருவாக்கப்படும்.
செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு புதிதாக ரூ.59 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகரில் உள்ள விருகம்பாககம் காவல் நிலையத்திற்கு ரூ.6.46 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
ஆவடி மாநகரில் சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அலவலகங்களுக்கு என ஒருங்கிணைந்த புதிய காவல் நிலைய கட்டிடம் ரூ.7.71 கோடி செலவில் கட்டப்படும்.
மொத்தம் 321 குடியிருப்புகள் ரூ.143.16 கோடி செலவில் கட்டப்படும்.
காவலர் தங்குமிடம் வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள 20 மாவட்ட, மாநகரங்களில் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட காவலர் தங்கும் இடங்கள் ரூ.30 கோடி செலவில் கட்டப்படும்.
நுண்ணறிவுப் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு கோவை மாநக ரத்தில் ரூ.5.98 கோடி செலவில் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் (சென்னை பெருநகரம் தவிர) பயன்பாட்டிற்கு என 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ. 12 கோடி செலவில் வாங்கப்படும்.
சென்னைப் பெருநகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய, காவல் துறையில் உள்ள பாதுகாப்புப் பிரிவின் பயன்பாட்டிற்கு என வெடிகுண்டுகளை கண்டு பிடித்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் ரூ.3.99 கோடி செலவில் வாங்கப்படும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.1.08 கோடி ஆகும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் 3000-ல் இருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப்படி ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.4.80 கோடி ஆகும்.
தடய அறிவியல் துறையின் குற்ற நிகழ்விடப் பார்வையிடல் விசாரணை முறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 50 நடமாடும் தடய அறிவியல் வாகனங்களும் அவற்றிற்கு தேவையான மனிதவளம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றிற்கு என ரூ.38.25 கோடி வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வேலூர் மாவட்டம் பள்ளிக் கொண்டா, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், கரூர் மாவட்டம் குளித்தலை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஆகிய 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ரூ.16.80 கோடி செலவில் அமைக்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமை இடமாக கொண்ட மத்திய மண்டலத்தை 2 ஆக பிரித்து விழுப்புரத்தை தலைமை இடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் ரூ.1.04 கோடி செலவில் உருவாக்கப்படும்.
தலா 25 தீயணைப் போர்களைக் கொண்ட 2 கமாண்டோ படைகளை உருவாக்குவதற்கு என அவர்களுக்கு பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.






