என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சித்தா, ஆயுர்வேதா பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் 10 நாட்களில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
- 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 10 நாட்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றார்.
Next Story






