என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: உதவி கோரி 498 தமிழர்கள் அழைப்பு - தமிழக அரசு தகவல்
- தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல்.
- தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 28ம் தேதி இரவு 11.55 மணியில் இருந்து தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதவி கோரி அழைத்த 974 இந்தியர்களில் 498 பேர் தமிழர்கள் என தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபோல், ஐயக்கிய அரபு-253, பக்ரைன்-95, கத்தார்-66, சவுதி அரேபியா-13, சிங்கப்பூர்-25, ஓமன்-6 என தமிழர்கள் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளனர்.
உதவிகோரி அழைத்த 498 நபர்களும் தொழில் ரீதியாகவும், சுற்றுலாவிற்கும் சென்று சிக்கியர்கள் என விளக்கம் அளித்துள்ளது.
உதவிகோரிய அனைவருக்கும் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என வெளிநாடு வாழ் நலத்துறை தெரிவித்துள்ளது.
உறவினர்கள் யாரும் பதற்றமோ அல்லது அச்சம் கொள்ளத்தேவை இல்லை எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.






