என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காவல் ஆணையருக்கு எதிராக சட்ட நடவடிக்கை, விசாரணையை மாற்ற வேண்டும் - சாட்டையை சுழற்றும் ஐகோர்ட்
    X

    காவல் ஆணையருக்கு எதிராக சட்ட நடவடிக்கை, விசாரணையை மாற்ற வேண்டும் - சாட்டையை சுழற்றும் ஐகோர்ட்

    • பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது,

    * மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.

    * ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என போதிப்பதைவிட அவரை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    * பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    * குற்றம் நடைபெற்றால் பெண்தான் குற்றம்சாட்டப்படுகிறார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும்.

    * பெண்கள் மீது குற்றம்சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகி விடும்.

    * பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

    * தனிப்பட்ட முறையில் யாருடனும் பேசுவதில் தவறு இல்லை. அது பெண்களுக்கான உரிமை, யாரும் தலையிட முடியாது.

    * ஆண் என்பதற்காக பெண்களை தொட உரிமை இல்லை.

    * Victim Blaming and Victim Shaming கூடாது.

    * பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    * மாணவி தனது படிப்பை தொடர்வதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்புக்கான செலவை இனி அவரிடம் வசூலிக்கக்கூடாது. மாணவி படிப்பு செலவுகளை ஏற்க வேண்டும்.

    * எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

    * காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து விசாரணையை மாற்ற வேண்டும். விசாரணையை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது.

    * காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினர்.

    Next Story
    ×