என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.க... அவர்களை விட மிகப்பெரிய துரோகியான அ.தி.மு.க. - கனிமொழி எம்.பி.
- ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
- எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:
இனிமேல் எந்த காலத்திலும் பா.ஜ.க.வோடு நாங்கள் கூட்டணி சேர மாட்டோம், அவங்க தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவிட்டு, போன தேர்தலில் அவங்க கூட கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி தேர்தல் வியூகம் அமைக்கிறோம் என்று சொல்லி யார் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்களை விட மிகப்பெரிய துரோகிகளாக அ.தி.மு.க. அவங்ககூட போய் சேர்ந்துவிட்டது.
அதனால் தான் அவர்களை வீடு வீடாக போய் அடையாளம் காட்டக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது.
அதேநேரத்தில் இத்தனை தாக்குதல்கள்... ஒன்றிய அரசாங்கம் நம் தமிழ் அடையாளங்கள் மீது நம்முடைய சரித்திரத்தை மாற்றணும், மொழியை மாற்றணும், ஏன் 39 பேர் பாராளுமன்றத்தில் நின்னு தமிழ்நாட்டுக்காக சண்டை போடுறாங்க என்ற காரணத்திற்காக தொகுதி சீரமைப்பு என்று சொல்லி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை குறைக்க நினைக்கக்கூடிய ஒரு பா.ஜ.க. அரசு ஆட்சி நடக்கிறது.
இன்று 39 பேராக இருப்பது நாளை 20 பேராக குறைந்தால் அவ்வளவு பெரிய மன்றத்தில் நாம் பேசுவது எடுபடாது. அதனால் அந்தநிலையை நாம் அடைந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றவர் நம் முதலமைச்சர்.
ஆனால் அதை செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்.
அதை செய்ய வேண்டும் என்றால், நமக்காக போராட வேண்டும் என்றால் உங்களுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது புரிய வேண்டும்.
ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
புதிதாக அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருவேன் என்று நினைத்து எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.
ஆட்சி மாற்றம் டெல்லியில் வரும்போது செய்து தருகிறோம் என்று சொன்னோம்.
வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் எல்லாம் இன்று தேர்தலில் நிற்பதற்கு, வாக்கு கேட்பதற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு சென்று, அதே நேரத்தில் நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.






