என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடும் எதிர்ப்பை அடுத்து தந்தை பெரியார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த கண் திருஷ்டி படம் அகற்றம்
- பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,
தந்தை பெரியார் பெயரில், தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கண் திருஷ்டி படத்தை நீக்காவிட்டால் அந்த கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,
இதனையடுத்து, பெரியார் நூலகம் கட்டப்படும் இடத்தில இருந்து கண் திருஷ்டி படம் அகற்றப்பட்டுள்ளது.
Next Story






