என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் பேரிடர் மூலம் முதலமைச்சர்தான் நம்மை காப்பார் என்பது உறுதியாகி உள்ளது- தமிழக அரசு பெருமிதம்
- தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இந்தக் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது.
இந்தியத் திருநாட்டில், தம்முடைய அயராத உழைப்பால் ஒவ்வொரு நாளும் பாடுபட்டு, புதிய புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி தமிழ்நாட்டை "இந்திய அளவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு" எனும் புகழை நிலைநாட்டியுள்ள முதலமைச்சரை தமிழ்நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டி, வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது என்று கலைஞர் ஒரு குறளுக்கு உரை வகுத்துள்ளார்.
இந்தத் திருக்குறள், கரூர் பேரிடரின் மூலம், துன்பம் வருகின்றபோது, நம்மைக் கைவிடுவோர் யார்? நம்மைக் காப்பவர் யார்? காப்பவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






