என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    • ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Live Updates

    • 29 Nov 2024 9:10 PM IST

      ஃபெங்கல் புயல் காரணமாக கூட்டுறவுத்துறை விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் 7ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 9:09 PM IST

      ஃபெங்கல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில் நாளை எந்த பாதிப்பும் இருக்காது எனவும், வங்கிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் எனவும் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    • 29 Nov 2024 8:55 PM IST

      ஃபெங்கல் புயல் நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும்.

    • 29 Nov 2024 8:40 PM IST

      அண்ணா பல்கலை.யின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

    • 29 Nov 2024 8:37 PM IST

      புயல் நாளை கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளி என்பதால் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

    • 29 Nov 2024 8:36 PM IST

      புயல் நாளை கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளி என்பதால் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

    • 29 Nov 2024 8:15 PM IST

      ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகல் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தம். ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகலில் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 7:57 PM IST

      ஃபெங்கல் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

    • 29 Nov 2024 7:52 PM IST

      சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 29 Nov 2024 6:28 PM IST

      மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×