என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

NDA கூட்டணியில் இணைய முடியாது - அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த டிடிவி தினகரன்
- டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
- டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தொடரும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடியாது. கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, அவசரப்பட வேண்டாம் என்று தொலைபேசியில் அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்; அதையேதான் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பிலும் கூறினார்" என்று தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அண்ணாமலை நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், டிடிவி தினகரன் அதனை நிராகரித்தார்.






