என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆளுநருக்கு தமிழ் புரியுமா என்று கேட்டேன்- பார்த்திபன்
    X

    ஆளுநருக்கு தமிழ் புரியுமா என்று கேட்டேன்- பார்த்திபன்

    • இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது.
    • ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    விழாவில் இயக்குனருர் பார்த்திபன் பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன்.

    ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார்.

    அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.

    ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. காதல் அப்படிதான்.

    என் முதல் புத்தகம் கிறுக்கல்கள். என்னுடைய அடுத்த புத்தகம் வழிநெடுக காதல் பூக்கும். அடிக்கடி ஒவ்வொரு மொமெண்ட்லும் ஒரு காதல் மலரும்.

    அப்படி எனக்கு அவர் மீது காதல் மலர்ந்தது. இது தொடரணும். இன்னும் அவர் செய்யும் நிறைய நல்ல விஷயங்களுக்கு நானும் உடந்தையாக கூட இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×