என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை கோவில் தாமரைக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
- குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரியும் அங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






