என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"அவர் பெரிய தலைவர் இல்லை" - இபிஎஸ்-ன் விமர்சனத்திற்கு பதிலளித்த தவெக நிர்வாகி செங்கோட்டையன்!
- கெடுதல் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என இபிஎஸ் விமர்சனம்
- அனைத்திற்கும் மக்கள் பதில் சொல்வார் என செங்கோட்டையன் பதில்
"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை" என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அவர் பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. என்னை பொறுத்தவரை தெளிவாக உள்ளேன். மக்கள் பதில் அளிப்பார்கள்" என தெரிவித்தார். முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நிலையில், நேற்று கோபிச்செட்டிபாளைய பிரச்சாரத்தில் அவரை தாக்கி பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி,
"வாக்குகளை கேட்க வீடு வீடாக வந்தவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?. அவரை அடையாளப்படுத்தியது, பதவி கொடுத்தது அதிமுக. ஆனால் இன்று மாற்றுக்கட்சிக்கு சென்றிருக்கிறார். இவரா உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்? இவர் மக்கள் மீது அக்கறை கொண்டவரா? எடுத்த எடுப்பில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. கட்சியின் விதிமுறைகளை மீறியதாலேயே நீக்கம் செய்தோம். கடந்த 2-3 ஆண்டுகளாகவே உள்ளிருந்தே கட்சிக்கு துரோகம் செய்தவர். நல்லது செய்தவர்களுக்கு நல்லதே நடக்கும். கெடுதல் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்." என விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.






