என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
- தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை.
- கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதனையடுத்து 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் செய்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.






