கோடை வெயிலுக்கு குட் பை..! ரெயில் பயணிகளுக்கு குளு குளு ஏ.சி. காத்திருப்பு அறைகள்

ஓய்வு அறைகள் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலுக்கு குட் பை..! ரெயில் பயணிகளுக்கு குளு குளு ஏ.சி. காத்திருப்பு அறைகள்
Published on

ரெயில் பயணிகளுக்கான அடிப்படையான வசதிகளை ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே மேம்படுத்தி வருகிறது.

பயணிகள் வருகை அதிகமாக உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத காத்திருப்போர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, ஸ்ரீரங்கம், காரைக்குடி, ராமேஸ்வரம், பழனி ஆகிய ரெயில் நிலையங்களில் ஏசி வசதியுடன் காத்திருப் அறைகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மேலும் 30 ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பயணிகள் வருகை அதிகமாக உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு, ஓய்வு அறைகள் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் திரு வாரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், மயிலாடுதுறை உட்பட 30 ரெயில் நிலையங்களில் ஏசி வசதி கொண்ட காத்திருப்பு அறைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com