என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தங்க நகை கடன் சுற்றறிக்கை- ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ்
    X

    தங்க நகை கடன் சுற்றறிக்கை- ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ்

    • தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
    • நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.

    மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.

    தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.

    ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×