என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தன் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும் விஜய் கம்முன்னு இருக்கார் - பாஜக நிர்வாகி கஸ்தூரி
- விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும்.
- நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன்.
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விஜய் இதுகுறித்து இதுவரை வாய்திறந்து பேசவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக நிர்வாகி கஸ்தூரி, "தணிக்கை துறை ஜன நாயகன் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது.
விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன். இப்போது அவர் அமைதியாக இருக்கிறார்.
இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பாராலிஸ் வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு, நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்னை வந்தாலும் பேசாமல் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.






