என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பின்னலாடை ஏற்றுமதியில் சலுகைகள் வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கடிதம்
- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.
- ஏற்றுமதியாளர்கள் மீதான கடன் தவணை வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும்.
டொனால்டு டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் பின்னலாடை ஏற்றுமதியில் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்கள் மீதான கடன் தவணை வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் கிட்டத்தட்ட 60 சதவீத பங்களிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடுமையான வரி உயர்வால் ஏற்படும் திடீர் போட்டித்தன்மை இழப்பை ஈடுசெய்ய இழப்பீடுகள் அல்லது ஏற்றுமதி ஊக்கத் தொகைகள் வடிவில் நிதி நிவாரணம் வழங்க வேண்டும். உற்பத்தியின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க பருத்தி நூலின் வரி விகிதங்களில் நிவாரணம் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.






