என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு அளித்த இ.பி.எஸ்.
- எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு விருந்து வைத்தார்.
- பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செங்கோட்டையன் பேசினார்.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது.
இதையொட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு விருந்து வைத்தார்.
இந்த விருந்தில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.பி.க்களும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று விருந்தை புறக்கணித்த செங்கோட்டையனுக்கு சட்டசபையில் பேச கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்தார்.
பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செங்கோட்டையன் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்தார்.
Next Story






