என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- இன்றும், நாளையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றும், நாளையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






