என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாக்டர் ராமதாஸ் நம்முடைய வழிகாட்டி, குலதெய்வம்: பொதுக்குழுவில் உருக்கமாக பேசிய அன்புமணி..!
- ஐயா அவர்கள் உருவத்திலே இங்கே இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்கள்.
- அவருக்கு இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது. இது ஐயா உடைய நாற்காலி.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
யார் வர வேண்டும் என்பது மிக முக்கியம். இது குறித்து சில காலத்தில் முடிவு செய்வோம். நல்லதொரு கூட்டணியை அமைப்போம். மெகா கூட்டணியை அமைப்போம். நாம் ஆட்சிக்கு வருவோம். இன்னும் ஒரு சில காலத்திலேயே அது நடைபெறும். உங்களுடைய விருப்பப்படியே நாம் கூட்டணியை அமைப்போம்.
வருகின்ற அடுத்த 6 மாத காலம் கடுமையாக உழைக்க வேண்டும். ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.
நம்முடைய வழிகாட்டி ஐயா ராமதாஸ் அவர்கள்தான், குலதெய்வம் ஐயா ராமதாஸ் அவர்கள்தான். ஐயா அவர்கள் உருவத்திலே இங்கே இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்கள். அவருக்கு இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது. இது ஐயா உடைய நாற்காலி. ஐயா பாமகவின் நிறுவனர். அதில் மாற்று கருத்து கிடையாது.
அதேவேளையில் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் நான் ஆசைப்படுபவன் கிடையாது. இன்று காலத்தின் கட்டாயத்திற்காக, உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
வியர்வை, ரத்தம் சிந்தி, உயர்த்தியாகம் செய்து இந்த கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஐயாவின் நிரந்தரமாக நாற்காலி. ஐயா இங்கே வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சாமிக்கு சில நேரம் கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா போன்றவை எடுப்போம். இதில் பூசாரிக்குதான் பிரச்சினை.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.






