என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Reels-ல் பார்ப்பதை எல்லாம் ரியாலிட்டி என நம்பிவிடாதீர்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நூற்றாண்டு காணும் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உருவாகி உள்ளனர்.
- பல நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, திறமையான கலைஞர்களை உருவாக்கிய பள்ளி.
சென்னை நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த விழாவில் எம்பி தயாநிதி மாறன், அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏக்கள் எழிலன், இனிகோ இருதயராஜன், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு சென்னை நாள், சென்னை பல்வேறு அடையாளங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் குட் ஷப்பர்ட் பள்ளி.
நூற்றாண்டு காணும் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உருவாகி உள்ளனர்.
பல நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, திறமையான கலைஞர்களை உருவாக்கிய பள்ளி.
பாடப்புத்தகங்களை கடந்து பண்பாட்டை வளர்க்கும் கல்வியால் குட் ஷெப்பர்ட் பள்ளி உயர்ந்துள்ளது.
இரக்கம், தைரியம், பொறுப்பான குடியுரிமை, ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை கொள்கை கொண்ட மாணவர்களை உருவாக்கியுள்ளீர்கள்.
ஒரு காலத்தில் கல்வி என்பது மறுக்கப்பட்டிருந்தது, ஏராளமான போராட்டத்திற்கு பின்னர் தான் கல்வி கதவு நமக்கு திறந்தது.
இந்தியளவின் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுவதற்கு மத்திய அரசே துணை போகிறது. சாதி, மதம் பார்க்காமல் பழகும் பண்பை மாணவர்கள் பள்ளியில் இருந்து கற்க வேண்டும்.
இதுவரை இல்லாத அளவிற்கு சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வு, பிளவுவாதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிலவும் சூழலால் பள்ளி நிகழ்விலும் கூட அரசியல் பேச வேண்டியதாக உள்ளது.
பள்ளியில் படிக்கும் நீங்கள் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி என முன்னேற வேண்டும், தேவையான அறிவை பெற நிறைய வாய்ப்புகள் உள்ளது.
ரீல்சில் பார்ப்பதை எல்லாம் ரியாலிட்டி என நம்பிவிடாதீர்கள். இன்ஸ்டாவில் ரோல் மாடலை தேட வேண்டாம்.. Like-ல் ஒன்றும் கெத்து இல்லை. படிப்பைப்போல் மாணவர்கள் நன்கு விளையாட வேண்டும். உடல்நலனில் அக்களை கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்கள் பெஸ்ட் பிரண்ட்ஸ் பெற்றோர்கள் என சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






