என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டங்ஸ்டன் விவகாரம்:  மழுப்பலாக பதில் சொல்லும் தி.மு.க. அரசு.. எடுத்துச் சொன்னா கோபம் வருது - இ.பி.எஸ்.
    X

    டங்ஸ்டன் விவகாரம்: மழுப்பலாக பதில் சொல்லும் தி.மு.க. அரசு.. எடுத்துச் சொன்னா கோபம் வருது - இ.பி.எஸ்.

    • 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்

    இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    சட்டசபை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்.

    டங்ஸ்டன் சுரங்க ஏலம் கடந்த 9 மாதங்கள் முன்பே நடந்து முடிந்தது. ஆனால் கடந்த 9 மாதமாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

    ஆரம்பத்திலேயே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மழுப்பலான பதிலைத்தான் திமுக அரசு அளித்துக்கொண்டிருக்கிறது.

    அரசு அலட்சியமாக இருந்தது என எடுத்துக் கூறினால் அனைவர்க்கும் கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×