என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    முதலமைச்சர் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

    • அதிக அளவிலான இளைஞர்களை தி.மு.க.வுக்கு சேர்ப்பதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கி விட்டுள்ளது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான தி.மு.க. தயாராகி வருகிறது. தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தேர்தல் வியூகத்தை தி.மு.க. அமைக்க உள்ளது.

    அந்த வகையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட அளவில் கட்சி வளர்ச்சி பணியை தீவிரப்படுத்தி, அதிக அளவிலான இளைஞர்களை தி.மு.க.வுக்கு சேர்ப்பதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கி விட்டுள்ளது.

    234 தொகுதிகளிலும் தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும், சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடர்பாகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    அதன்படி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×