என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்த தென்னக ரெயில்வே
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம்.
- லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் நிவாஸ் மற்றும் சாருமதி என்ற மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தென்னக ரெயில்வே கூறியிருப்பதாவது:-
உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






